business

img

தொடர்ந்து அதிகரிப்பில் பெட்ரோல்,டீசல் விலை...  

புதுதில்லி:
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் மக்கள் அவதிப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது என்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாகவே செயல்படுகிறது என்றும் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் சாடுகின்றனர்.

சர்வதேச சந்தை நிலவரத்தை காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்உயர்த்தி வருகின்றன. கடந்த சில வாரங்களாக பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 101.92 ரூபாய்,டீசல் லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 101.19 ரூபாய்,டீசல் லிட்டருக்கு 89.72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 107.20 ரூபாய், டீசல் லிட்டருக்கு 97.29 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு 101.35 ரூபாய், டீசல்லிட்டருக்கு 92.81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

;